corruption charges against 39 IAS officers

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை இது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள 39 பேரில், 29 பேர் மத்திய அரசின் பல்வேறு துறைகளில், செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியிருக்கிறது

சென்ற ஆண்டு மத்திய அரசு திருப்தியாக செயல்படாத 129 ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்துள்ளது. அதே போல தனது 67,000 ஊழியர்களின் ஆவணங்களை சரிபார்த்து சரியாக பணிப்புரியாத அதிகாரிகள் மீது நடவடிகை எடுக்கப்படவுள்ளதாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

இந்த 67 ஆயிரம் பேரில் 25,000 பேர் குடிமைப்பணி அதிகாரிகள் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.