வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….

வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பும் போது அவசரத்தில தவறாக அனுப்பிவிட்டு அடிக்கடி மன்னிப்புக் கேட்பவரா நீங்கள்?

உங்களுக்கான செய்திதான் இது… தற்போது வாட்ஸ் அப் செயலியில் அனுப்பிய தகவலை திருத்தும் புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ் புக்கில் ஒரு ஸ்டேடஸை பதிவிட்டு பின்னர் அதை திருத்தவோ அல்லது மெருகூட்டவோ செய்யலாம்.

ஆனால் வாட்ஸ் அப், டிவிட்டர் போன்ற செயலிகளில் அந்த வசதி கிடையாது

பெரும்பாலோனோர் பயன்படுத்தும் தகவல் அனுப்பும் செயலியான வாட்ஸ் அப் பயனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப பல வசதிகளை வழங்கி வருகிறது.

தற்போது அனுப்பிய தகவல்களை திருத்தும் வசதியையும் வழங்கியுள்ளது. இது பெரும்பாலான பயனாளர்களுக்கு தேவைப்படும் என்பதால் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த வசதி மூலம் ஏற்கனவே அனுப்பிய தகவல்களை திருத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தும் வசதி கொன்ட அப்டேட் வாட்ஸ் அப் பீட்டா பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஆப்பிள் ஐஓஎஸ் கைபேசிகளில் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும்.

இந்த வசதி விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.