மும்பையில் மாடல் ஒருவரை கொன்று சூட்கேஸூக்குள் அடைத்து ரோட்டில் வீசிச்சென்ற மாணவனை போலீசார் கைது செய்தனர். 
தற்போது திரையுலகில், பிரபல நடிகைகளாக இருக்கும் பலருக்கு பிள்ளயார் சுழியாக அமைந்தது மாடலிங் துறை தான். நடிகை ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா சோப்ரா, அசின், தீபிகா படுகோனே என பலர் மாடலிங் துறையில் இருந்து தான் பின்பு நடிகையாக மாறினர். 

இதனால், இப்போது நடிப்பில் ஆர்வம் இருப்பவர்களின் முதல் தேர்வு மாடலிங்காக தான் இருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த, 20 வயதே ஆகும் பிரபல மாடல் அழகி, மான்சி மும்பையில் வசித்து வருகினார். பி.காம். படித்து கொண்டே மாடலிங் செய்து வரும் இவர், திரைப்படங்களில் நடிக்கவும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.  

இவரு தன்னை விட வயது ஒரு குறைந்த சையத் என்பவருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒருநாள் இருவரும் தனிமையில் சந்தித்த போது, இருவருக்குள்ளும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒரு நிலையில் இது முற்றவே அது அடிதடியாக மாறி  சையத், மான்சியை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது மான்சி தலையில் அடிப்பட்டு அதிகப்படியான ரத்தம் வெளியேறி உயிர் இழந்தார். 

பின்னர் மான்சியின் உடலை சூட்கேஸில் அடைத்துள்ளார். பிறகு டாக்சி ஒன்றை சையத் புக் செய்துள்ளார். டாக்சியின் டிக்கியில் அந்த சூட்கேஸை வைத்து அடைத்துவிட்டு விமான நிலையம் செல்ல வேண்டும் என்று சொல்லி சையத் புறப்பட்டுள்ளார். சிறிது தூரம் சென்றதும் வேறு வழியில் செல்லுமாறு டிரைவரிடம் கூறியுள்ளார் சையத்.  

கார் மலாடு அருகே சென்றபோது ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்த சொன்ன சையத், சூட்கேஸுடன் இறங்கிவிட்டு டாக்சி டிரைவரை அனுப்பிவிட்டார். பிறகு அந்த பகுதியின் ஓரத்தில் சூட்கேஸை வீசிவிட்டு யாருக்கும் தெரியாதது போல ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டார்.  அடுத்த சில நிமிடங்களிலேயே டாக்சி டிரைவர் அந்த இடத்துக்கு வந்து பார்த்தபோது சையத் கொண்டு வந்த சூட்கேஸ் ஓரத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். பின்னர்  அங்கு விரைந்த காவல்துறையினர்  சூட்கேஸை திறந்து பார்த்தபோது உள்ளே இளம் பெண்ணின் உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விரைந்து செயல்பட்ட போலீசார், சையத் சென்ற ஆட்டோவை விரட்டிச் சென்று அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.