இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16,922 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.7 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 14,894 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 16,922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,73,105 ஆக அதிகரித்துள்ளது. அதில், 1,86,514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,71,697 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14, 894 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

மகாராஷ்டிராவில்1,42,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  6,739 பேர் உயிரிழந்துள்ளனர். 1,42,900 பாதிப்பு மற்றும் 6,739 உயிரிழப்புடன் 2வது இடத்தில் டெல்லி உள்ளது. 67,468 பாதிப்பு மற்றும் 866 உயிரிழப்புடன் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் 28,943 பேருக்கும், ராஜஸ்தானில் 16,009 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 12,448 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.