Asianet News TamilAsianet News Tamil

ஷாக் ரிப்போர்ட்... ஒரே நாளில் வரலாறு காணாத வகையில் பாதிப்பு புதிய உச்சம்.. பிரேசிலை முந்திய இந்தியா..!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 90,802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டியுள்ளது.

Coronavirus 90,802 new cases, infections cross 42 lakh
Author
Maharashtra, First Published Sep 7, 2020, 10:53 AM IST

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 90,802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சற்று ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது. 

Coronavirus 90,802 new cases, infections cross 42 lakh

இந்நிலையில்,  இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 90,802 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,04,614 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,016 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 71,642 ஆக உயர்ந்துள்ளது.

Coronavirus 90,802 new cases, infections cross 42 lakh

இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,80,865ல் இருந்து 32,50,429 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 69,564 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,82,542 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  உயிரிழப்பு 1.70 சதவீதமாக குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 77.31 சதவீதமாக உள்ளது. இதையடுத்து கொரோனா மொத்த பாதிப்பில் உலக அளவில் இந்தியா பிரேசிலை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios