Asianet News TamilAsianet News Tamil

மகாராஷ்டிராவை மல்லாக்கப்போட்ட கொரோனா... இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிப்பு புதிய உச்சம்..!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,38, 845ஆக அதிகரித்துள்ளது. மறுபுறம் உயிரிழப்பு எண்ணிக்கையும் 4021 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

coronavirus 7,000 new cases, India records biggest spike
Author
Maharashtra, First Published May 25, 2020, 10:30 AM IST

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,38, 845ஆக அதிகரித்துள்ளது. மறுபுறம் உயிரிழப்பு எண்ணிக்கையும் 4021 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

coronavirus 7,000 new cases, India records biggest spike

இந்நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868ல் இருந்து 1,38, 845ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 3,867ல் இருந்து 4,021ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54,441 ல் இருந்து 57, 721 ஆக அதிகரித்துள்ளது. 

coronavirus 7,000 new cases, India records biggest spike

கொரோனா பாதிப்புடன் 77, 103 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 154 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா 50,231 பாதிக்கப்பட்டுள்ளனர். 1635 பேர் உயிரிழந்துள்ளனர்.  16,277 பேர் பாதிப்புடன் தமிழகம் 2வது இடத்தில் இருந்து வருகிறது. 111 பேர் உயிரிழந்துள்ளனர். 3வது இடத்தில் குஜராத்தும், 4வது இடத்தில் டெல்லியும் உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios