கொரோனா வாழ்வாதாரத்தை மட்டும் சூறையாடவில்லை.. மனித ஆயுளையே சூறையாடுது.. இந்தியாவில் வெளியான பகீர் தகவல்!

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியாவில் மனிதர்களின் சராசரி ஆயுட் காலம் 2 ஆண்டுகள் குறைந்திருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று சொல்கிறது.
 

Corona is not only looting livelihood .. it is looting human life.. information released in India!

சீனாவில் 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. பின்னர், சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் பரவி மக்களை பாடாய்படுத்தி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், அதன் வீரியம் இன்னும் குறையவில்லை. தொடர்ந்து கொரோனா வைரஸ் உரு மாற்றமடைந்து தொடர்ந்து உலக மக்களை அசைத்து வருகிறது. இதனால் செய்வதறியாமல் உலக நாடுகள் விழி பிதுங்குகின்றன.Corona is not only looting livelihood .. it is looting human life.. information released in India!
தற்போதைய சூழலில் உலகில் கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில்தான் அதிகம் உள்ளன. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டும் உதவும் என்பதால், உலகம் முழுவதுமே தடுப்பூசி செலுத்தும் பணிகள்  நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு என இரு தடுப்பூசிகள் கடந்த 10 மாதங்களாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. Corona is not only looting livelihood .. it is looting human life.. information released in India!
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பிறகு  மக்களின் சராசரி ஆயுட் காலம் 2 ஆண்டுகள் குறைந்திருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த மக்கள்தொகை ஆய்வுக்கான சர்வதேச மையம் என்ற அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 69.5ஆகவும், பெண்களின் சராசரி ஆயுட் காலம் 72-ஆகவும் இருந்தது. 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 67.5ஆகவும், பெண்களுக்கு 69.8 ஆக குறைந்து விட்டதாக அந்த மையத்தின் பேராசிரியர் சூரியகாந்தி யாதவ் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios