Asianet News TamilAsianet News Tamil

Omicron : ஒமைக்ரான் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா… கர்நாடகாவில் பரபரப்பு!!

கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதை அடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேரின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

Corona for 5 people who were in contact with two people who were infected with Omicron in Karnataka
Author
Karnataka, First Published Dec 2, 2021, 7:16 PM IST

கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதை அடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேரின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது.  இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

Corona for 5 people who were in contact with two people who were infected with Omicron in Karnataka

இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. மேலும் சில நாடுகள் அந்நாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் பெங்களூரு வந்த 2 ஆண்களுக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவருக்கு 66 வயது மற்றொருவருக்கு 46 வயது என்று கூறப்படுகிறது.

Corona for 5 people who were in contact with two people who were infected with Omicron in Karnataka

இந்த நிலையில் கர்நாடகாவில் ஒமைக்ரான் உறுதியான இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒமைக்ரான் உறுதியான 46 வயதான நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதை அடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேரின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே ஒமைக்ரான் உறுதியாகியுள்ள இருவரில் ஒருவர் தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் என்று கர்நாடகா அரசு தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து மக்கள் தற்போதைய சூழலில் தடுப்பு நடவடிக்கைகளை மீறிவிட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதேபோல் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios