இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் சீரான வேகத்தில் உயர்ந்துகொண்டிருந்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை, டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்டவர்களை கண்டறிந்து பரிசோதிக்க தொடங்கிய பின்னர், மளமளவென உயர்ந்தது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2458ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கிற்கு சிலரை தவிர பெரும்பான்மை மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து வீடுகளில் தனிமைப்பட்டிருக்கின்றனர். சமூக விலகலையும் கடைபிடித்துவருகின்றனர்.

எனினும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் அதிகபட்சமாக இருக்கிறது. அங்கு கொரோனா பாதிப்பு 400ஐ கடந்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 309ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் கேரளாவையே ஓவர்டேக் செய்து தமிழ்நாடு, இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு 286ஆக உள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 309ஐ எட்டிவிட்டது. 

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்:

மகாராஷ்டிரா - 423

கேரளா - 286

தமிழ்நாடு- 309

கர்நாடகா - 125

ராஜஸ்தான்  - 154

குஜராத் - 95

உத்தர பிரதேசம் - 126

ஜம்மு காஷ்மீர் - 70

தெலுங்கானா - 154

லடாக் - 13

ஹரியானா- 43

ஆந்திரா - 152

மத்திய பிரதேசம் - 121

மேற்கு வங்கம் - 53

சண்டிகர் - 16

சத்தீஸ்கர் - 18

பீகார் - 29

கோவா - 6

புதுச்சேரி - 6

அந்தமான் நிகோபார் - 10.

அசாம் - 16.

மணிப்பூர் - 2

அருணாச்சல பிரதேசம், மிசோரம் - 1