கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சமூக தொற்றாக கொரோனா பரவுவதை தடுக்க, ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சிறப்பு வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்துவருவதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனாவை தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டுவந்த நிலையில், டெல்லி நிஜாமுதீனில் தப்லீகி ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பியவர்களில் நிறைய பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்துவிட்டது. 

கொரோனா பாதிப்பில் முச்சதம் அடித்த மகாராஷ்டிரா தான், இந்தியாவில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களும் இரட்டை சதமடித்துவிட்டன. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 234ஆக உயர்ந்தது. கர்நாடகா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

மாநில வாரியாக கொரோனா பாதிப்பின் முழு விவரம்:

மகாராஷ்டிரா - 339

கேரளா - 265

தமிழ்நாடு- 234

கர்நாடகா - 121

ராஜஸ்தான்  - 129

குஜராத் - 86

உத்தர பிரதேசம் - 113

ஜம்மு காஷ்மீர் - 62

தெலுங்கானா - 124

லடாக் - 13

ஹரியானா- 43

ஆந்திரா - 132

மத்திய பிரதேசம் - 99

மேற்கு வங்கம் - 37

சண்டிகர் - 16

சத்தீஸ்கர் - 18

பீகார் - 24

கோவா - 6

புதுச்சேரி - 6

அந்தமான் நிகோபார் - 10.

அசாம் - 16.