சீனாவில் உருவான கொரோனா உலகையே ஆட்டிப்படைத்துவருகிறது. இத்தாலி, ஸ்பெய்ன், அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனாவால் கதிகலங்கி போயுள்ளன. உலகம் முழுதும் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை எட்டவுள்ள நிலையில், 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பான முறையில் எடுக்கப்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், சரியான நேரத்தில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால் சமூக பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஜனவரி 30ம் தேதி கேரளாவில் முதல் கொரோனா கேஸ் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது 724ஐ எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் முதல் மாநிலமாக சதமடித்த மகாராஷ்டிராவையே கேரளா முந்திவிட்டது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. 

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த விவரத்தை பார்ப்போம்.

கேரளா - 138

மகாராஷ்டிரா - 130 

கர்நாடகா - 55

டெல்லி - 36

பஞ்சாப் - 29

ஜம்மு காஷ்மீர் - 14

லடாக்  - 13

ராஜஸ்தான் - 43

உத்தர பிரதேசம் - 43

தமிழ்நாடு - 29

தெலுங்கானா - 43

ஹரியானா - 21

ஆந்திரா - 10

ஹிமாச்சல பிரதேசம் - 4

குஜராத் - 43

உத்தரகண்ட் - 4

ஒடிசா - 3

மேற்கு வங்கம் - 11

சண்டிகர் - 7

சத்தீஸ்கர் - 6

மத்திய பிரதேசம் - 23

பீகார் - 7

கோவா - 6

மணிப்பூர், மிசோரம் - 1