Asianet News TamilAsianet News Tamil

சிக்னலில் நிற்காத கார்... தடுக்க முயன்றபோது 1.5 கி.மீ. இழுத்தச் செல்லப்பட்ட போலீஸ்

மும்பை அருகே சாலை விதிகளை மீறிச் சென்ற கார் தடுக்க முயன்ற காவலரை 1.5 கி.மீ. தொலைவுக்கு இழுத்துச் சென்றிருக்கிறது.

Cop dragged on car's bonnet for 1.5 km in Maharashtra; driver charged with murder bid
Author
First Published Feb 14, 2023, 10:41 AM IST

மகாராஷ்டிராவில்  சாலை விதிகளை மீறிச்சென்ற காரை நிறுத்த முயன்ற காவலர் அந்தக் காரின் முன்பகுதியில் தொற்றியபடி 1.5 கி.மீ. தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

மஹாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தின் வசாய் நகரில் சிக்னலில் நிற்காமல் சென்ற காரை போக்குவரத்துக் காவலர் ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் கார் நிற்காமல் வேகமாகச் சென்றதால், அந்தக் காவலர் காரின் முன்பகுதியில் தொற்றியபடி சுமார் 1.5 கிமீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. காரை ஓட்டி வந்த 19 வயது இளைஞர் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் கார் முறையான ஓட்டுநர் உரிமமும் இல்லை என்று விசாரணையில் தெரியவந்தது.

உன்னதத் தியாகத்தை ஒருபோதும் மறக்கமுடியாது - பிரதமர் மோடி உருக்கம்

Cop dragged on car's bonnet for 1.5 km in Maharashtra; driver charged with murder bid

கைது செய்யப்பட்ட இளைஞர் மீது கொலை முயற்சி, பொது ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய குற்றங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாணிக்பூர் காவல் ஆய்வாளர் சம்பத்ராவ் பாட்டீல் தெரிவிக்கிறார்.

“பரபரப்பான சந்திப்பில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர், ​​உத்தர பிரதேச பதிவெண் கொண்ட கார் போக்குவரத்து சிக்னலைத் தாண்டிச் செல்வதைக் கண்டு அதன் டிரைவரை வண்டியை நிறுத்தச் சொன்னார். காவலர் டிரைவரிடம் விசாரிக்க முன்வந்தபோது டிரைவர் காரை காவலர் மீது மோதினார். இதில் காரின் முன்பகுதியில் விழுந்த காவலர் சுமார் 1.5 கிலோமீட்டர் இழுத்துச் செல்லப்பட்டார். இதில் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டிருக்கிறது.” என்றும் பாட்டீல் கூறுகிறார்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக கார் நின்றபோது அப்பகுதியில் இருந்தவர்கள் டிரைவரை மடக்கி பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். காரை ஓட்டிய இளைஞர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 307, 308, 353 மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் காரை ஓட்டிய இளைஞர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Aksai Chin railway: 1962ல் போருக்கு வித்திட்ட இந்திய எல்லைப் பகுதியில் ரயில்பாதை அமைக்கும் சீனா

Follow Us:
Download App:
  • android
  • ios