உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தின் இந்து யுவ வாகனி அமைப்பினர், சாலையில் பெண்ணுடன் இரு சக்கரவாகனத்தில் வந்தவரை தாக்கி, அந்த பெண்ணிடமும் தவறாக நடந்து கொண்டனர்.

ேமலும், நேற்றுமுன்தின், மீரட் நகரில் ஒரு இந்து பெண்ணின் வீட்டில் இருந்த முஸ்லிம் நபரை வீட்டுக்குள் புகுந்து அடித்து தாக்கிய சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

தாக்குதல்

இது குறித்து மீரட் நகர போலீஸ் நிலைய அதிகாரி தர்மேந்திர குமார் கூறுகையில், “ மீரட் நகரில் நேற்று ஒரு  ஆணும், பெண்ணும் இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர். அவர்களை வழிமறித்த இந்து யுவ வாகினி அமைப்பினர் தாங்கள் ஆன்ட்டி ரோமியா படை என்று அறிமுகம் செய்து, அந்த வாகனம் ஓட்டி வந்த நபரை அடித்து உதைத்தனர். அந்த பெண்ணிடமும் தகாத முறையில் நடந்துள்ளனர். அதன்பின், வாகனம் ஓட்டி வந்த சகோதரர் அதைப் பார்த்து அவர்வந்து இருவரையும் மீட்டுள்ளார்.

பொய் புகார்

அதுமட்டுமல்லாமல், யுவ வாகனி அமைப்பினர், இரு சகோதரர்களையும் பிடித்து போலீசிடம் ஒப்படைத்து, பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் கேள்விப்பட்டு அந்த பெண் நடந்த சம்பவங்களை கண்ணீருடன் கூறியபின்,அந்த இருவரும் விடுவிக்கப்பட்டனர். இந்து யுவ வாகினி அமைப்பினர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்’’ என்று தெரிவித்தார். 

தவறாக நடந்தனர்

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “ என் வருங்காலக் கணவர் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். என்னை வீட்டில் கொண்டுபோய் விடுவதற்காக பைக்கில் இருவரும் வந்தோம். அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் எங்களை மறித்து, தாக்கி, என்னிடம் தவறாக நடந்தனர். தங்கள் இந்து யுவ வாகனி அமைப்பின், ஆன்ட்டி ரோமியை படையைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர்’’ என்றார்.

வீடுபுகுந்து

இதற்கிடையே புதன்கிழமை ஒரு இந்து பெண் வீட்டில் இருந்த முஸ்லிம் இளைஞரை வீடுபுகுந்து இழுத்து வந்து இந்து யுவ வாகினி அமைப்பினர் தாக்கினர். இது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தனிநபரின் உரிமைகளை பறிக்கும் விதத்தில் இந்து யுவ வாகினி அமைப்பினர் நடக்கிறார்கள் எனத் தெரிவித்தனர். இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.