Asianet News TamilAsianet News Tamil

வேலை கேட்டு வந்த பெண்ணிடம்.. வீடியோ காலில் சுய இன்பம் செய்த ஆம் ஆத்மி அமைச்சர்.. குவியும் கண்டனங்கள்..

பஞ்சாப் அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பால்கர் சிங், வேலை தேடும் பெண்ணை வற்புறுத்தி ஆடைகளை அவிழ்த்து, சுயஇன்பத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

Controversy following AAP's Balkar Singh's alleged forced undressing and video call masturbating of a job-seeking lady-rag
Author
First Published May 27, 2024, 5:30 PM IST | Last Updated May 27, 2024, 5:30 PM IST

ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பால்கர் சிங், வேலை தேடும் பெண்ணை வற்புறுத்தி ஆடைகளை அவிழ்த்து, சுயஇன்பத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாரதீய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) தேசிய செயலாளரான தஜிந்தர் பாக்கா (Tajinder Bagga) சமூக ஊடக தளமான எக்ஸ்-ல் பதிவிட்டு வலியுறுத்தினார்.

தஜிந்தர் பாக்காவின் பதிவின்படி, 21 வயது பெண் ஒருவர் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் பால்கர் சிங்கிடம் வேலை கேட்டு அணுகினார். உதவி வழங்குவதற்குப் பதிலாக, பால்கர் சிங் அந்த பெண்ணை வீடியோ அழைப்புகளைச் செய்யும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது அவர் அவளை ஆடைகளை அவிழ்த்துவிட்டு சுயஇன்பம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது சோசியல் மீடியாவில் பெரும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

தஜிந்தர் பாக்கா தனது பதிவில், ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரை நேரடியாக குறிப்பிட்டு, பால்கர் சிங்கை அவரது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “21 வயது சகோதரி ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் அமைச்சர் பால்கர் சிங்கிடம் வந்து தனக்கு வேலை தேவைப்படுவதாக கூறுகிறார். பால்கர் அவளை வீடியோ கால் செய்யச் சொல்லி, ஆடைகளைக் களைந்து, சுயஇன்பம் செய்யும்படி கட்டாயப்படுத்துகிறார்” என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பலர் தங்கள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர், இளம் பெண்ணுக்கு நீதியை உறுதிப்படுத்தவும், பாலியல் துன்புறுத்தல் பிரச்சினைக்கு தீர்வு காணவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

நகைகளை விற்க போறீங்களா.. இனிமேல் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.. நோட் பண்ணிக்கோங்க..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios