Modi BBC documentary: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி மகன் கண்டனம்
Anil k Antony codemns PM Modi BBC documentary::பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி சேனல் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Anil k Antony codemns PM Modi BBC documentary:: பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி சேனல் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதைத் தொடர்ந்து பெரிய அளவிலான கலவரமும் ஏற்பட்டது.
2019 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக பற்றிய திக்விஜய் சிங் பேச்சுக்கு ராகுல் காந்தி கண்டனம்
இந்த கலவரத்தில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து பிபிசி சேனல், “ India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் என எந்த சமூக வலைத்தளத்திலும் இந்த ஆவணப்படத்துக்கான லிங்குகளை பதிவிடக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆனால், மத்திய அரசின் எதிர்ப்பை மீறி தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர், கேரள மாநிலத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் பிபிசி ஆவணப்படத்தை திரையிடத் தயாராகி வருகிறது. இது தொடர்பான அறிவிப்பையும் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று மோடி ஆவணப்படம் திரையிட முடிவு!கேரள முதல்வருக்கு பாஜக வேண்டுகோள்!
பிபிசியின் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் அரசியலில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் கே.அந்தோணி, ட்விட்டரில் பிபிசியின் மோடி குறித்த ஆவணப்படத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்ட கருத்தில் “ பாஜகவுடன் பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட, நான் நினைப்பது என்னவென்றால், பிரிட்டன் அரசு சார்பில் நடத்தப்படும் பிபிசி சேனல் இந்தியர்களைப் பற்றி நீண்டகாலமாகவே தவறான எண்ணம் கொண்டுள்ளதுதான்.
அந்த சேனலில், ஈராக் போருக்கு மூளையாக இருந்த, பிரிட்டன் முன்னாள் உள்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ராவின் கருத்தை, இந்திய நிறுவனங்கள் மீது பதிப்பது ஆபத்தான முன்னுதாரணம், நம்முடைய இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.
- Anil k Antony
- Anil k Antony codemns
- Anti-modi bbc documentary
- BBC
- BBC Documentary On PM Modi
- BBC documentary
- BBC documentary on modi
- BBCs Modi documentary
- PM Modi
- PM Modi BBC documentary
- bbc documentary controversy
- bbc documentary screened in Hyderabad university
- bbc documentary screening on Kerala
- bbc modi documentary screening
- bbc modi documentary screening Hyderabad
- modi documentary