congress protest to ban pakistan channels
ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபிய நாடுகளின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பிரிவினைவாதிகள் தொடர்ந்து முழு அடைப்பை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில் மக்களை திசை திருப்பும் விதமாக தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபிய நாடுகளின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் பி.எல்.புனியா, பிரச்சனை நிலவி வரும் ஜம்மு காஷ்மீரில் இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
மக்களை குழப்பும் இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதை மத்திய அரசு தடுக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
