6 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட்தற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நட்த்தப்படும் என மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, ஸ்வீடனிடம் இருந்து போஃபர்ஸ் பீரங்கிகளை இந்திய ராணுவத்திற்கு வாங்கஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து இதில் சிலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் 1989 ல் காங்கிரஸ் ஆட்சியைஇழந்தது.

இதைதொடர்ந்து, இதுகுறித்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், 2005 ஆம் ஆண்டு வழக்குவிசாரணையை ரத்து செய்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் பொதுவிவாதம் நடைபெற்றது.

விவாதம் தொடங்கியதும், போஃபர்ஸ் பீரங்கி ஊழலை சிபிஐ மீண்டும் விசாரிக்க கோரி பாஜக உறுப்பினர்கள்சபாநாயகரிடம் கேட்டனர். இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், எம்பிக்கள் கோகாய், சுரேஷ், ஆதிரஞ்சன் சவுத்ரி, ரஞ்சித் ரஞ்சன், சுஷ்மிதாதேவ், எம்.கே ராகவன் ஆகிய 6 பேரையும், 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், 6 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட்தற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நட்த்தப்படும் என மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.

அமளியில் ஈடுபட்ட எம்பிக்களுக்கு கடும் தண்டனை வழங்குவது பொருத்தமானது அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.