காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் பா.ஜ.க.,வில் இணைவதற்காக கட்சி உறுப்பினர் மற்றும் மேல்சபை எம்பி பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் மேல்சபை எம்.பி.யாக இருந்தவர் சஞ்சய் சிங். அமேதி அரச குடும்பத்தை சேர்ந்த இவர் அசாம் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது சஞ்சய் சிங் பா.ஜ.கவில் இணைய முடிவு செய்துள்ளார். இதனால், காங்கிரஸ் உறுப்பினர் பதவி மற்றும் மேல்சபை எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளா்.

பா.ஜனதாவில் இணைவது குறித்து சஞ்சங் சிங் கூறுகையில் ‘‘காங்கிரஸ் இன்னும் பழைய காலங்களிலேயே இருந்து வருகிறது. எதிர்காலம் பற்றி தெரியவில்லை. இன்று ஒட்டுமொத்த நாடும் மோடியோடு இருக்கிறது. நாளை பா.ஜனதாவில் இணைய இருக்கிறேன். இதனால் காங்கிரசில் இருந்து விலகியதோடு, மேல்சபை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துள்ளேன்’’ என்றார்.1990-ல் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு மக்களை எம்.பி.யானார்.