Sonia : காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.. குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு - முழு விவரம்!
Sonia Gandhi : காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக மீண்டும் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்கள் தேர்வாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லியில் இன்று ஜூன் 8ம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கக் கோரி காங்கிரஸ் காரியக் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றிய சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பு வெளியானது.
“இன்றைய கூட்டத்தில் சிபிபியின் தலைவராக சோனியா காந்தியை நியமிக்க வேண்டும் என்று கார்கே முன்மொழிந்தார். CPP-யின் தலைவராக சோனியா காந்தியை நாங்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளோம் என்றார் அவர். லோக்சபா தலைவர் யார் என்பது குறித்து சிபிபி தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
வயநாடு கிடையாது.. குடும்ப தொகுதியான ரேபரேலியை டிக் அடித்த ராகுல் காந்தி.. வெளியான முக்கிய தகவல்..!
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது, ஏனெனில் எந்தக் கட்சியும் அந்த இடத்தை ஏற்க தேவையான இடங்களைப் பெற முடியவில்லை. இந்த சூழலில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளை மீறி 99 இடங்களைப் பெற்று 2014க்குப் பிறகு முதல்முறையாக எதிர்க்கட்சி என்ற நிலையை வகிக்க தகுதி பெற்றுள்ளது.
ஒரு எதிர்க்கட்சி பதவிக்கு தகுதி பெற, சபையில் உள்ள மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 10% இடத்தை பெற வேண்டும். இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சிபிபி தலைவராக ராஜ்யசபா எம்பி நியமனம் செய்யப்பட்டார். கட்சித் தலைவர்கள் கவுரவ் கோகோய், தாரிக் அன்வர் மற்றும் கே சுதாகரன் ஆகியோரால் இந்த முன்மொழிவு ஆதரிக்கப்பட்டு இறுதியில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
புனேயில் கொட்டித் தீர்த்த மழை... வெள்ளத்தில் சர்ஃபிங் செய்த இளைஞர்! வைரலாகும் வீடியோ!