congress lead in manipur

மணிப்பூர் மாநில மக்களின், குறிப்பாக பெண்களின் உரிமைக்காக 13 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளாவுக்கு அல்வா கொடுத்துள்ளனர் அந்த ஊர் மக்கள்.

கடந்த 2016ஆம் ஆண்டு தனது பல ஆண்டு உண்ணாவிரதத்தை முடித்து கொண்ட இரோம் ஷர்மிளா தேர்தலில் இறங்க போவதாக அறிவித்திருந்தார்.

தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மணிப்பூர் மாநில பெண்களின் உரிமைக்காக போராடிய இவர் பல ஆண்டுகளாக மூக்கு வழியாக மட்டும் திரவ உணவை உட்கொண்டு வந்தார்.

மணிப்பூரில் தனி ஒருவராக போராடி வந்த இரோம் ஷர்மிளா உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர் ஆவார்.

என்னதான் அவர் பிரபலமாக இருந்தாலும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி வந்தாலும் அவருக்கு அல்வாதான் கொடுத்துள்ளனர் அந்த ஊர் வாக்காளர்கள்.

காமராஜரோ, இரோம் ஷர்மிளாவோ யாராக இருந்தாலும் மக்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிவதில்லை.

தற்போது மணிப்பூரில் 60 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. மணிப்பூர் மாநிலத்துக்காக 16 ஆண்டுகளுக்கு மேல் போராடிய ஐரோம் ஷர்மிளா பெரும் பின்டைவை சந்தித்து வருகிறார். அவர் போட்டியிட்ட தவுபால் தொகுதியிலேயே அவர் முன்னிலை பெற முடியவில்லை.

மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.