குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் கட்சி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

மாநிலங்களவை தேர்தலில் நோட்டா இடம் பெறும் என்று தேர்தல் கமிஷன் அண்மையில் தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

குஜராத், மாநிலங்களவை தேர்தல் வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங். தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர அகமது படேல் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், குஜராத் மாநிலங்களவை தேர்தலில் முதன் முறையாக நோட்டா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனத.

இதையடுத்து மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. 

குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜக வேட்பாளர்களுக்கு சாதகமாக வாக்களிப்பதை தடுக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. பாஜகவுக்கு சாதகமாக வாக்களிப்பதை தடுக்க குஜராத் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூருவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக வாக்களிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.12 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்தது. 

இதையடுத்து, பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டில், இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.