மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் 542 மக்களவை தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 

இதில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே பாஜக 340-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமையும் சூழ்நிலை எழுந்துள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மக்களவை தேர்தல் தோல்வியை பொறுப்பேற்று கொள்கிறேன். மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற பாஜகவுக்கும், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானிக்கும் வாழ்த்து கூறினார்.

நாட்டில் பெரும்பாலான மக்கள் காங்கிரஸ் கட்சியை ஏற்றுக்கொண்டுள்ளனர். தோல்வியை கண்டு காங்கிரஸ் தொண்டர்கள் அச்சப்பட தேவையில்லை. இந்தியாவின் நலனில் மோடிக்கு அக்கறை கொள்வார் என்று நம்புகிறேன். இன்றைய தினத்தில் என்னால் இதை மட்டும்தான் சொல்ல முடியும் என்று ராகுல் கூறினார்.