ஆதார் அட்டை விவரங்களை திருடிய 8 இணைய தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தேசிய அடையாள அட்டை ஆணையம் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த 8 இணையதளங்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து தற்போது இந்த இணைய தளங்கள் மீது டெல்லி போலீசார் எப்ஐஆர் போட்டு, வழக்கு பதிவு செய்துள்ளனர் .

ஆதார் அட்டை என்பது மிகவும் பாதுகாப்பானது என மத்திய அரசு ஒருபுறம் தெரிவித்து வந்தாலும் இது போன்று மிக சுலபமாக ஆதார் விவரங்களை, அவர்களுக்கு தெரியாமலே திருடுவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .

அதிலும் குறிப்பாக வங்கிகணக்கு, வருமானவரித்துறை, மொபைல் எண் உள்ளிட்ட அனைத்திலும் ஆதார்  முக்கிய பங்காக உள்ளது. இந்நிலையில் ஒருவருடைய ஆதார் எண்ணை கொண்டு அவருடைய முழு தகவலையும் நொடி பொழுதில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் இந்த 8 இணைய தளங்களும் எதற்காக ஆதார் எண்ணை, அவர்கள் அனுமதி இல்லாமல் திருடியது? யாருக்காக  திருடினார்கள் ? அவ்வாறு திருடப்பட்டஆதார் எண்ணை கொண்டு எந்த விதத்தில்  அவர்கள் தவறாக பயன்படுத்த நினைக்கிறார்கள் என பல்வேறு கோணத்தில் செல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.