ஆந்திரமாநிலம் ஐதராபாத் நகரில் கூடுதலாக ஆப்கானிஸ்தான் தூதரகம் ஒன்றை விரைவில் அமைக்க உள்ளதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.

டெல்லி, மும்பை, உள்ளிட்ட நகரங்களில் ஆப்கான் தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவுடனான நட்புறவை மேலும் பலபடுத்தும் விதமாக ஆந்திர மாநிலம் ஐதராபாத் நகரில் கூடுதலாக ஆப்கான் தூதரகம் தொடங்க உள்ளதாக அந்நாட்டின் இந்திய தூதர் ஷெய்தா முகமது தெரிவித்துள்ளார்.

கல்வி, வர்த்தகம், மற்றும் கலாச்சார ரீதியாக இந்திய மக்களுடன் ஆப்கானிஸ்தான் ஒன்றிணைந்து செயல்பட விரும்புகிறது. அதன் அடிப்படையிலேயே ஐதராபாத்தில் புதிய தூதரகம் தொடங்கபட உள்ளது.

இந்த தூதரகம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவாக்கம் முன்னேற்றமான நடவடிக்கையாக இருக்கும் என ஷெய்தா முகமது அவர் கூறினார்.