Asianet News TamilAsianet News Tamil

குறைந்தது வணிக சிலிண்டர் விலை... புத்தாண்டு தினத்தில் சூப்பர் அறிவிப்பு!!

டெல்லியில் வர்த்தக கேஸ் சிலிண்டருக்கான விலை இன்று 102.50 ரூபாய் குறைந்து 1998.50 விற்பனை செய்யப்படுகிறது. 

commercial cylinder prices are low in delhi
Author
Delhi, First Published Jan 1, 2022, 2:52 PM IST

டெல்லியில் வர்த்தக கேஸ் சிலிண்டருக்கான விலை இன்று 102.50 ரூபாய் குறைந்து 1998.50 விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டு 660 ஆக நிர்ணயிக்கப்பட்டது.  பின்னர் ஜனவரி மாதத்தில் சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. மாதம் மாதம் விலை அதிகரித்து, அக்டோபர் மாதத்தில் காஸ் சிலிண்டர் விலை ரூ. 915.50 ஆக நீடித்தது. தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

commercial cylinder prices are low in delhi

இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதில், நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த மாத விலையிலேயே தொடருவதாக அறிவித்துள்ளது. எனினும், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்து ரூ.2,234.50க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி ரூ.1865 ஆக இருந்த சிலிண்டர் விலை இரண்டு மாதங்களில் 369 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில் வணிகப் பயன்பாடு கொண்ட சிலிண்டர்கள் விலை உயர்வு காரணமாக வியாபாரிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா காரணமாக ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் வீழ்ச்சியைச் சந்தித்து உள்ள நிலையில், ஓராண்டில் மட்டும் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால் செலவீனம் அதிகரிப்பதாக வியாபாரிகள் கூறியிருந்தனர். ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாயை கடந்து உள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் வர்த்தக கேஸ் சிலிண்டருக்கான விலை இன்று 102.50 ரூபாய் குறைந்து 1998.50 விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

commercial cylinder prices are low in delhi

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டு 660 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி 4ஆம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15ஆம் தேதி மீண்டும் ரூபாய் 50ம் உயர்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் 175 ரூபாய் அதிகரிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்நிலையில், 2022 புத்தாண்டு தினமான இன்று டெல்லியில், வர்த்தக சிலிண்டருக்கான விலை இன்று 102.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில், 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை 1998.50 ரூபாயாக உள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு காரணமாக ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios