கடைசி வரை தன் மகன் இறந்த செய்தியை தெரிந்து கொள்ளாமலேயே அவரது தந்தை கங்கய்யா ஹெக்டே சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். 

கடைசி வரை தன் மகன் இறந்த செய்தியை தெரிந்து கொள்ளாமலேயே அவரது தந்தை கங்கய்யா ஹெக்டே சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தியா மட்டுமல்ல உலக முழுவதும் பிரபலமாக விளங்கியவர் காபி டே உரிமையாளரும், கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா. இவர் தொழிலில் ஏற்பட்ட கடன் நெருக்கடியால் கடந்த மாதம் 29-ம் தேதி நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் 31-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. வி.பி.சித்தார்த்தாவின் மறைவால் அவரது குடும்பம் மற்றும் காபி தோட்டத்தில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களும் கடும் சோகத்தில் மூழ்கியது. 

இந்நிலையில், நீண்ட சித்தார்த்தாவை தொழிலதிபராக மாற்ற காரணமான இவரது தந்தை கங்கய்யா ஹெக்டே, உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று விட்டார். அவருக்கு மைசூருவில் உள்ள சாந்தசேரி கோபால கவுடா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், கங்கய்யா ஹெக்டே நேற்று கிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் நேற்று சொந்த ஊரான சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகாவில் உள்ள சீக்கனஹள்ளி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான காபி தோட்ட தொழிலாளர்கள், காபி டே நிறுவன ஊழியர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் சொந்த ஊரிலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தன் மகன் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டது கூட தந்தை கங்கய்யா ஹெக்டேவுக்கு தெரியாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.