Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி... முதல்வர் ஹெலிகாப்டரில் சோதனை...!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cm Naveen Patnaik helicopter check... Election flying squad
Author
Odisha, First Published Apr 17, 2019, 5:04 PM IST

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  cm Naveen Patnaik helicopter check... Election flying squad

ஒடிசா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் நடைப்பெற்று வருகிறது. இதற்கான முதல் கட்ட தேர்தலில் மாநில சட்டமன்ற மற்றும் சில மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 11-ம் தேதி நடைப்பெற்றது. மேலும் இந்த மாநிலத்தில் நாளை 2-ம் கட்ட தேர்தல் 5 மக்களவை தொகுதிகளில் நடைப்பெறுகிறது. இந்நிலையில் ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் அவர்கள் நேற்று ரூர்கேலா பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். cm Naveen Patnaik helicopter check... Election flying squad

அந்த பகுதியில் ஹெலிகாப்டர் தலையிறங்கியதும் அம்மாநில தேர்தல் சிறப்பு அதிகாரிகள் முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மற்றும் அவரின் பைகளில் சோதனையிட்டனர். சோதனை நிறைவு பெறும் வரை முதல்வர் ஹெலிகாப்டரிலேயே அமர்ந்திருந்தார். இந்த சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் எந்த ஆவணத்தையும் கைப்பற்றவில்லை. இந்த சம்பவம் பொதமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. cm Naveen Patnaik helicopter check... Election flying squad

முன்னதாக கர்நாடகா முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ஆகியோர் வாகனங்களில் பாரப்பட்சமின்றி தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios