அயோத்தி ராமர் கோவில் பின்னணியில் என்ன நடந்தது? 1528 - 2023 வரை நடந்த வரலாற்று நிகழ்வுகள் ஒரு பார்வை!!
அயோத்தி ராமர் கோவில் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்து 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அன்றுதான் ராமர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரம்மாணடமான இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்தியாவில் இருந்து 600 பேர் மட்டும் இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 23ஆம் தேதி பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அயோத்தி நகரில் பக்தர்களின் வசதிக்காக ரயில் நிலையம், விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவில் கட்டுவதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை 1528ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை பார்க்கலாம். ராம ஜென்மபூமி என்று அழைக்கப்படும் ராமர் பிறந்த இடம் நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பு கிடைக்கப்பெற்று இன்று கோவில் உருவாகியுள்ளது. இதற்கு முன்னதாக, இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று வரலாற்று நிகழ்வுகள் மூலம் நீதிமன்றம் உறுதி செய்து, 2019, ஜனவரி 9ஆம் தேதி ஐந்து பேர் கொண்ட அமர்வு வரலாற்று தீர்ப்பு வழங்கியது.
ராமர் ஜென்மபூமி வழக்கும், வரலாறும் இன்று, நேற்று நடந்தது அல்ல. 495 ஆண்டுகளாக அதாவது 1528 முதல் 2023 ஆம் ஆண்டு வரை நீண்ட பயணத்தை கொண்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: சீதைக்கு 196 அடி பிரம்மாண்டமான சேலை!
அயோத்தி ராமர் கோவிலும் வரலாறும் ஒரு பார்வை:
1528: சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு மசூதி கட்டுவதற்காக முகலாய பேரரசர் பாபரின் தளபதி மிர் பாகி உத்தரவிட்டார். இந்த இடம் ராமர் பிறந்த இடம் என்றும், இந்த இடத்தில் பழமையான கோவில் இருப்பதாகவும் இந்து சமூகத்தினர் கூறினர். மசூதியின் குவிமாடங்களில் ஒன்றின் கீழ் உள்ள இடத்தில் ராமர் பிறந்த இடம் இருப்பதாக இந்துக்கள் வலியுறுத்தி வந்தனர்.
1853-1949: 1853 ஆம் ஆண்டில் மசூதி கட்டப்பட்ட இடத்தைச் சுற்றி வகுப்புவாதக் கலவரம் ஏற்பட்டது. அதன்பின், 1859 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் நிர்வாகம் சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றி வேலி அமைத்து, மசூதிக்குள் முஸ்லிம்கள் வழிபட அனுமதித்தது மற்றும் இந்துக்கள் முற்றத்தின் அருகே வழிபட அனுமதிக்கப்பட்டு இருந்தது.
1949: மசூதிக்குள் ராமர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டசெப்டம்பர் 23, 1949 அன்று உண்மையான அயோத்தி ராம ஜென்மபூமி தொடர்பான சர்ச்சை தொடங்கியது. ராமர் அங்கு காட்சியளித்ததாக இந்துக்கள் தெரிவித்தனர். சிலைகளை உடனடியாக அகற்ற உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டது, ஆனால் மாவட்ட நீதிபதி கே.கே. நாயர் மத உணர்வுகளை புண்படுத்தும் மற்றும் வன்முறையை தூண்டும் என்ற அச்சம் காரணமாக இந்த உத்தரவை அமல்படுத்த முடியாது என்றார்.
1950: பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் இரண்டு சிவில் வழக்குகள் தொடரப்பட்டன. ஒன்று சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் வழிபாட்டுக்கு அனுமதி கோரியும், மற்றொன்று சிலைகளை நிறுவ அனுமதி கோரியும் தாக்கல் செய்யப்பட்டது.
1959- நிர்மோஹி அகரா ராமர் பிறந்த இடத்தின் மூன்றாவது உரிமையாளராக வழக்கு தொடுத்தனர்.
1961: சிலைகளை அகற்றக் கோரியும், சர்ச்சைக்குரிய நிலத்தை சொந்தமாக்கக் கோரியும் உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியம் மனு தாக்கல் செய்தது.
1986: பிப்ரவரி 1, 1986 அன்று, பைசாபாத் மாவட்ட நீதிபதியான உமேஷ் சந்திர பாண்டேவின் மனுவின் அடிப்படையில், கே.எம். பாண்டே இந்துக்கள் வழிபட அனுமதித்து, கட்டிடத்தில் இருந்த பூட்டுகளை அகற்ற உத்தரவிட்டார்.
1992- பாபர் மசூதி இடிப்பு டிசம்பர் 6 ஆம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. பாபர் மசூதியின் சர்ச்சைக்குரிய கட்டமைப்பை அழித்தது குறித்து விசாரிக்க இந்திய அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். லிபரான் தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தது.
1993- சர்ச்சைக்குரிய இடத்தில் நிலத்தை கையகப்படுத்துவதற்காக அயோத்தியில் குறிப்பிட்ட பகுதியை கையகப்படுத்தும் சட்டத்தை ஏப்ரல் 3 ஆம் தேதி மத்திய அரசு நிறைவேற்றியது.
1994- அக்டோபர் 24 அன்று ஒரு முக்கிய இஸ்மாயில் ஃபரூக்கி வழக்கில், மஸ்ஜித் இஸ்லாத்தின் ஒரு பகுதியாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
2010- அலகாபாத் உயர்நீதிமன்றம் செப்டம்பர் 30 அன்று, 2:1 பெரும்பான்மையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய பகுதியை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லாலா இடையே மூன்றாகப் பிரித்தது.
2011- அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
2016- மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
2017- நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணுமாறு மார்ச் 21 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பரிந்துரைத்தார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 1994 தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க ஆகஸ்ட் 7ஆம் தேதி உச்ச நீதிமன்றம் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒன்றை அமைத்தது.
2019- உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை மத்தியசம் செய்வதற்கு அனுப்பியது. தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் 8 வாரங்களுக்குள் முடிக்க குழுவைக் கேட்டுக் கொண்டது. இருப்பினும், குழு எந்த முடிவுக்கும் வரவில்லை.
ஆகஸ்ட் 06, 2019- உச்ச நீதிமன்றம் தினசரி அடிப்படையில் 40 நாட்களுக்கு இந்த வழக்கை விசாரித்தது.
அக்டோபர் 16, 2019- இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நவம்பர் 9, 2019- உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. சர்ச்சைக்குரிய நிலம் ராம் லாலாவுக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மாற்றாக சன்னி வக்பு வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.
டிசம்பர் 12, 2019- அயோத்தியில் நிலத்தை ராம் லல்லாவிடம் ஒப்படைத்து நவம்பர் 9 அன்று அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய பல மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
பிப்ரவரி 5, 2020- அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக 15 பேர் கொண்ட ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவை உருவாக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, அயோத்தி மாவட்டத்தில் புதிய மசூதி கட்டுவதற்காக, லக்னோ-அயோத்தி நெடுஞ்சாலையில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு உத்தரப் பிரதேச அரசு ஒதுக்கியது.
பிப்ரவரி 19, 2020- ராமர் கோவில் அறக்கட்டளை அலுவலகப் பொறுப்பாளர்களை நியமித்தது.
ஆகஸ்ட் 5, 2020- பிரதமர் மோடி அயோத்தியில் கோவில் கட்டும் பணியைத் தொடங்க பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
ராமர் கோவில் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டதால் முதலில் திட்டமிடப்பட்டதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும் என்று அதை வடிவமைத்த கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் சோம்புரா கூறினார். நாகரா கட்டிடக்கலை பாணியில் கோவில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. டும். கோவிலின் கருவறைக்கு மேல் சிகரம் (கோபுரம்) இருக்கும். கோயில் 161 அடி உயரமும், படிக்கட்டுகளின் அகலம் 16 அடியும் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று கோவில் முதல் கட்டப்பணிகள் முடிந்து ரஹீப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.