கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான எடியூரப்பாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் திணறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டம் ஜெவர்கியில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஹெலிபேடை சுற்றி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் ஓடும் பாதையில் பறந்தன.

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் பலப்பரிட்சையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக பாஜகவை பொறுத்தவரை செல்வாக்கு பெற்ற தலைவராக இருப்பவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா.

நான்கு முறை முதல்வர். மூன்று முறை எதிர்க்கட்சி தலைவர்.5 வயதாகி விட்டதால் அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ள திட்டமிட்டார். கட்சியிலும் கட்டாய ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டியே 2021ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த சூழலில் 2023 சட்டமன்ற தேர்தல் களம் பாஜகவிற்கு சாதகமாக இல்லை எனச் சொல்லப்படுகிறது.

கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா பயணித்த ஹெலிகாப்டர், ஹெலிபேட் மைதானத்தில் பிளாஸ்டிக் தாள்கள் மற்றும் கழிவுகளால் நிரப்பப்பட்டதால் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் எடியூரப்பாவின் ஹெலிகாப்டர் கடைசி நிமிடத்தில் தரையிறங்குவதை நிறுத்தியது. பின்னர் போலீசார் தரையை சுத்தம் செய்த பிறகு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

YouTube video player

இதையும் படிங்க..பெண்களுக்கு மாதம் "ஆயிரம் ரூபாய்" திட்டத்தை தொடங்கி வைத்தார் ம.பி முதல்வர் - தமிழ்நாட்டில் எப்போது தெரியுமா.?

இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்