சீனாவின் "Ultra Set" மொபைல் மூலம் இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்!
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தொலைதொடர்பில், பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சீன டெலிகாம் கியர் 'Ultra Set' வகை மொபைல்கள் கைப்பற்றப்பட்டது. இவ்வகைபேசிகள் செல்போன் திறன்களை மற்றும் சிறப்பு வானொலி உபகரணங்களுடன் ஒருங்கிணைத்து, தனித்துவமான தகவல் தொடர்பு பொறிமுறையில் இயங்குகிறது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான என்கவுண்டர்களில், 'அல்ட்ரா செட்' என அழைக்கப்படும் மிகவும் என்கிரிப்ட் செய்யப்பட்ட சீன தொலைத்தொடர்பு கியர் மொபைல் கைபற்றப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் இராணுவம் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்திற்காக சீன நிறுவனங்களால் பிரத்தியேகமாக தனிப்பயனாக்கப்பட்ட இந்த வகை சிறப்பு கைபேசிகள், ஜம்மு பிராந்தியத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிந்தாராவில் கடந்த ஆண்டு ஜூலை 17-18 இடைப்பட்ட இரவில் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகும், இந்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதியும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Ultra - Set (அல்ட்ரா-செட்) என்றால் என்ன, அது எப்படி வேறுபட்டது!
"அல்ட்ரா-செட்" என்பது ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக கவனம் செலுத்தப்பட்ட அதிகமாக என்கிரிப்ட் செய்யப்பட்ட சீன டெலிகாம் கியரைக் குறிக்கிறது. இந்த சிறப்பு கைபேசிகள் பாகிஸ்தான் ராணுவத்திற்காக சீன நிறுவனங்களால் பிரத்தியேகமாக தனிப்பயனாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 'அல்ட்ரா-செட்' கைபேசிகள் செல்போன் திறன்களையும், சிறப்பு வானொலி உபகரணங்களுடன் ஒருங்கிணைத்து, செய்தி பரிமாற்றம் மற்றும் ரேடியோ அலைகளில் இயங்குகிறது. பொதுவான மொபைல் தொழில்நுட்பங்கள் (GSM அல்லது CDMA) போலல்லாமல், அவை ஒரு தனித்துவமான தகவல் தொடர்புமுறையை கொண்டுள்ளன.
ஒவ்வொரு 'அல்ட்ரா செட்' மொபைல்களும் எல்லைக்கு அப்பால் அமைந்துள்ள ஒரு கட்டுப்பாட்டு நிலையத்துடன் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது, மேலும் இரண்டு 'அல்ட்ரா செட்'களும் ஒன்றையொன்று எவ்விதத்திலும் கனெக்ட் ஆகாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பைட்டுகளாக சுருக்கப்பட்ட இந்த செய்திகளை கைபேசியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள முதன்மை சேவையகத்திற்கு கொண்டு செல்ல சீன செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
INS Kalvari-யில் விரைவில் புதிய தொழில்நுட்பம்! - Make in India-வின் புதிய முயற்சி!
எல்லையில் அதிநவீன வாகனங்கள்!
எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்புத் திறனை சீனா சில காலமாக தீவிரமாக மேம்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆதரவில் ஸ்டீல்ஹெட் பதுங்கு குழிகளை நிர்மாணித்தல், ஆளில்லா வான்வழி மற்றும் போர் வான்வழி வாகனங்களை வழங்குதல், என்கிரிப்ட் செய்யப்பட்ட தகவல் தொடர்பு கோபுரங்களை நிறுவுதல் மற்றும் நிலத்தடி ஃபைபர் கேபிள்களை அமைத்தல் ஆகியவை அடங்கும். கூடுதலாக, "JY" மற்றும் "HGR" தொடர் போன்ற சீன ரேடார் அமைப்புகள் மூலம் இலக்கு கண்டறிதல் திறன்கள் மேம்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் SH-15 ஹோவிட்சர் ஏற்றப்பட்ட டிரக் போன்ற மேம்பட்ட ஆயுதங்களும் எல்லையில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.