சீனாவால் ஒரு அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என பிரதமர் மோடி செல்வதில் உண்மை இல்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்

சீனாவுடனான எல்லை பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எல்லை பிரச்சினை தொடர்பாக பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலனில்லை. எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் உடன்பட சீனா மறுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சரச்சைக்குரிய பகுதிகளில் சாலைகள் அமைத்தல், ராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், பாலங்கள் அமைத்தல் போன்ற அத்துமீறல் செயல்களில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும், சீன ராணுவம் நமது நாட்டுக்குள் நுழைந்து நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதோடு, பல்லாயிரக் கணக்கான துருப்புகளையும் நிலைநிறுத்தி வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

முன்னதாக, இந்திய - சீன லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி இருநாட்டு ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.

அதேபோல், அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் செக்டார் பகுதியில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்தியப் பகுதிக்குள் சீன வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இதைக் கண்ட இந்தியப் படைகள், உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தின. அப்போது, இந்திய - சீன வீரர்களுக்கு இடையே இடையே கடும் மோதல் ஏற்பட்டது. மேலும், தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக சீனா உரிமை கொண்டாடும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை ஒட்டியுள்ள அசல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு மிக அருகில் புதியதாக நீண்ட தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை சீனா அமல்படுத்த உள்ளது. பான்காங் ஏரி பகுதியில் 2 பெரிய பாலங்களையும் அந்நாடு அமைத்துள்ளது.

நான் ரொம்ப பாக்கியசாலி... அயோத்தி அனுமன் கோயிலில் வழிபாடு செய்தபின் நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்

சீனா நமது நிலத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில், சீனாவால் ஒரு அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என பிரதமர் மோடி செல்வதில் உண்மை இல்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79 ஆவது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தற்போது லடாக்கில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அவரது திரு உருவப்படத்திற்கு மரியாதை செய்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சீனா நிலத்தை அபகரித்துவிட்டது என்பதுதான் இங்கு கவலையாக உள்ளது. சீன ராணுவம் நமது பகுதிக்குள் நுழைந்து நிலங்களை அபகரிப்பதாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். ஆனால், ஒரு அங்குல நிலம் கூட எடுக்கப்படவில்லை என்று பிரதமர் கூறுகிறார். இதில் உண்மை இல்லை. இங்குள்ள யாரை வேண்டுமானாலும் நீங்கள் கேட்கலாம்.” என தெரிவித்துள்ளார்.