சிறுவர்களின் ஆபாசப் படங்களை பார்த்து, வாட்ஸ்ஆப் குரூப்களில் பகிர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதோ, ஈடுபடுத்துவதோ குற்றமாகும். அதேபோல், சிறுவர்கள் தொடர்பான ஆபாசப் படங்களையும் பார்ப்பது குற்றம். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நவ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் எப்போதும், தனது ஸ்மார்ட்ஃபோனை விடாமல் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த தந்தை, அது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மழுப்பலான பதில் சொன்ன அந்த இளைஞன், மீண்டும் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களை பார்த்தான்.

தனது மகன், யாரையாவது காதலிக்கிறானா? என்று சந்தேகம் கொண்ட தந்தை, இளைஞன் தூங்கிய பிறகு, அவனது செல்போனை எடுத்து, பார்த்தபோது, அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனார். தனது மகன், சிறுவர்கள் பாலியல் உறவு கொள்ளும் காட்சிகளைத் தான், இத்தனை நாட்களாக கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டுள்ளான் என்பதை அறிந்த தந்தை, அது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.
 
இதையடுத்து, செல்போனை ஆய்வு செய்த காவல்துறையினர், அதில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் வெளிநாட்டு சிறுவர்கள் என்பதை தெரிந்து கொண்டனர். சிறுவனும் சிறுமியும் உறவு கொள்ளுதல், சிறுமியுடன் பெரிய ஆண் உறவு கொள்ளுதல், சிறுவனும் பெரிய பெண் உறவு கொள்ளுதல் போன்ற காட்சிகள் அதில் இருந்ததை பார்த்த காவல்துறையினர், அது எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தினர். அந்த காட்சிகள் அனைத்தும் தங்களுக்கு என தனியாக உள்ள வாட்ஸ்ஆப் குரூப்பில் வந்தது என இளைஞன் கூறியதை அடுத்து, வாட்ஸ் ஆப் குரூப்பில் அது மாதிரியான வீடியோக்களைப் பகிர்ந்த 5 பேரை கைது செய்தனர். மேலும், அந்த வீடியோக்களை பார்த்தவர்களையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.