Asianet News TamilAsianet News Tamil

சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து, தாயை கொன்று... உயிர் தப்பிய காமக் கொடூரன்..!

சிறுமி ஹாசினி கொலை வழக்கில், குற்றவாளி தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

child Hassini murder case...Tashwant ban
Author
Delhi, First Published Apr 8, 2019, 2:03 PM IST

சிறுமி ஹாசினி கொலை வழக்கில், குற்றவாளி தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

சென்னை மாங்காட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினி வெளியே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தியதில் அதே குடியிருப்பில் வசித்து வந்த சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்த் (24) என்பவர் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.

 child Hassini murder case...Tashwant ban

பின்னர் உடலை ஒரு பையில் எடுத்துச்சென்று அனகாபுத்தூர் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதையடுத்து தஷ்வந்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது. child Hassini murder case...Tashwant ban

இதனையடுத்து தஷ்வந்த் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். பின்னர் மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறுமி கொலை வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி வேல்முருகன் தஷ்வந்த் குற்றவாளி என தீர்ப்பளித்து, அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

கீழ் நீதிமன்றத் உத்தரவை எதிர்த்து தஷ்வந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, உயர்நீதிமன்ற தீர்ப்பையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தஷ்வந்த் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. child Hassini murder case...Tashwant ban

இந்த வழக்கில் தஷ்வந்த்க்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. தஷ்வந்த் மேல்முறையீடு குறித்து பதில் மனுத் தாக்கல் செய்யவும், தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios