இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முற்பட்ட போது 100 அடி உயர மலையில் இருந்து கீழே விழுந்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

செல்ஃபி மோகத்தால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இதை ஏற்றக்கொள்ளும் மனநிலையில் இளைஞர்கள் இல்லை. இந்நிலையில், கர்நாடக மாநிலம், சார்மடிமலை வழியாகச் செல்கிறது பெங்களூரு - சிக்கமகளூரு தேசியநெடுஞ்சாலை. இந்த மலையின் மேலே நின்று கொண்டு ஒரு இளைஞர் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். 

அப்போது, கால்தவறிய அவர் 100 அடி கொண்ட பாறைகளில் சருக்கிக் கொண்டே கீழே இருந்த சாலையில் விழுந்தார். இதை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில், படுகாயமடைந்த அந்த இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கால்தவறிய 100 அடி கொண்ட பாறைகளில் சருக்கி விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலக அளவில் செல்ஃபி எடுத்து உயிரிழந்தவர்கள் இந்தியாவில் தான் அதிகம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.