தேர்தல் முடிவுகள் 2023.. உச்சகட்ட பரபரப்பில் சத்தீஸ்கர் தேர்தல் களம் - காங்கிரசை நெருங்கும் பாஜக!
Chhattisgarh Election Results 2023 : சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸும், பாஜகவும் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன, முதலில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்த நிலையில், அங்கு பாஜக அதிக இடங்களை பெற்று வருகின்றது.
காலை 8 மணிக்கு சத்தீஸ்கர் மாநில வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் உறுதியாக முன்னணியில் இருந்தது. ஆனால் அதன் பிறகு காலை 11 மணி நிலவரப்படி பாஜக காங்கிரஸ் கட்சியை நெருங்கி வருகின்றது என்றே கூறலாம். இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக கடுமையான போட்டியைக் கொடுத்து வருகின்றது பாஜக.
இன்று காலை 11:15 மணிக்கு, காங்கிரஸ் 45 ஆகவும், பாஜக 44 ஆகவும் இருந்த நிலையில் முதலில் தபால் வாக்குகள் திறக்கப்பட்டன. பதிவான மொத்த வாக்குகளில் அஞ்சல் வாக்குகள் மிகக் குறைந்த சதவீதமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ராகுலின் பாரத் ஜோடோ... ஆற்றல்மிக்க ரேவந்த்: தெலங்கானாவை தட்டி தூக்கிய காங்கிரஸ்!
"இருள் கலைந்து விட்டது, சூரியன் உதித்துவிட்டது, தாமரை மலரப்போகிறது. பாஜக வரவிருப்பதால் அனைத்து ஊழியர்களும் இந்த எண்ணும் பணியில் இணைந்திருக்க வேண்டும்" என்று பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான ராமன் சிங் கட்சித் தொண்டர்களுக்கு ட்வீட் செய்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
தெலுங்கானா தேர்தல் 2023.. தொடர் முன்னிலையில் காங்கிரஸ் - கடும் கவலையில் மூழ்கிய முதல்வர் KCR!
வெளியான நான்கு கருத்துக்கணிப்பு முடிவுகளில் பெரும்பான்மையானவை காங்கிரஸ் 46 இடங்களை பெற்று வெற்றி பெரும் அறிவித்துள்ளது. (சத்தீஸ்கர் சட்டமன்றம் மொத்தம் 90 இடங்களைக் கொண்டுள்ளது) மேலும் இரண்டு கருத்துக்கணிப்புகள் 42-44 என்று கணித்துள்ளது, மீதமுள்ள மூன்று தலா 40க்கும் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது.