சத்தீஸ்கரில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கர் என்ற பகுதியிலிருந்து பில்லை பகுதிக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் - டிரக் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.