ஐ.நாவின், பருவநிலை மாற்றத்துக்கான அரசுகளுக்கு இடையிலான குழு(ஐபிசிசி) ,”ஓசன்ஸ் அன்ட் கிரையோஸ்பியர்” என்ற தலைப்பில் மொனாாக்கோ நகரில் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் “பனிப்பாறைகள் உருகுவதால், ஏற்படும் கடல்மட்டம் உயர்வு இதற்கு முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக ஒருமீட்டர் உயரத்துக்கு உயர்ந்து வருகிறது, 2100-ம் ஆண்டில் இதன் தாக்கம் கடுமையாக இருக்கும், உலகம் முழுவதும்1400 கோடி மக்கள் மக்கள் பாதிக்கப்படுவார்கள்

பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயர்வதால் உலகம் முழுவதும் 45 கடற்கரை நகரங்கள், அதில் இந்தியாவில் உள்ள சென்னை, சூரத், கொல்கத்தா, மும்பை நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படும். 50 செமீ அளவுக்கு கடல்மட்டம் உயர்ந்து வெள்ளம் வரக்கூடும். இது நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்று கடல்நீர் மட்டம் உயரக்கூடும். இந்த கடல்நீர் மட்டும் உயர்வால் சிறிய தீவுகள்,கடற்கரை ஓர நகரங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்

உலகம் வெப்பமயமாதலைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையில் தீவிரம் இல்லை,இதனால் பனிப்பாறைகள் உருகி அதனால் கடல்மட்டும் உயரும் பட்சத்தில் கடல்நீரில் வசிக்கும் உயிரினங்கள் கடுமையான பாதிப்புக்கும், உயிரிழப்புக்கும் ஆளாகும். அதிலும் ேபராபத்தை விளைவிக்கும் புயல்கள் உருவாகும்.

மனிதர்கள் தொடர்ந்து கரியமிலவாயு, ஜிஎச்ஜி வாயுக்களை வெளியேற்றி வந்தால், கடல்நீர் மட்டம் 60முதல் 110 செ.மீ வரை உயரக்கூடும்.
சைரோஸ்பியர் பாதிப்பால் இமாலயப்பகுதியில் இந்துகுஷ் மலைப்பகுதியல் வசிக்கும் மத்திய ஆசிய, தெற்கு ஆசியா, மத்திய ஆசியா பகுதிகளைச் சேர்ந்த 24 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். ” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.