1984 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் பிவி நரசிம்மராவை தோற்கடித்து பாஜகவின் முதல் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜங்கா ரெட்டி உடல்நலக்குறைவால் காலமானார். மிக முக்கியமான கட்டத்தில் பாஜகவிற்கு திறம்பட குரல் கொடுத்தவர் என்று பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
1984 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் பிவி நரசிம்மராவை தோற்கடித்து பாஜகவின் முதல் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜங்கா ரெட்டி உடல்நலக்குறைவால் காலமானார். மிக முக்கியமான கட்டத்தில் பாஜகவிற்கு திறம்பட குரல் கொடுத்தவர் என்று பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பா.ஜ.க.வின் சார்பில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பழம்பெரும் தலைவர் ஜங்கா ரெட்டி காலமானார். அவருக்கு வயது 87. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்கு பின், 1984ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவின் ஹனுமகொண்டா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் பிரதமர் பி வி நரசிம்மராவை தோற்கடித்தார். பாஜக சார்பில் முதல் முறையாக எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 மக்களவை உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார். அத்தேர்தலில் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி கூட தோல்வியை தழுவினர்.

மக்களவைத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நரசிம்மராவை விட 54 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றவர்.மக்களவையில் ஒருங்கிணைந்த ஆந்திராவில் ஒரே பாஜக வேட்பாளர் இவர்தான். இந்நிலையில் இவர் ஹைதராபாத்தில் உள்ள KIMS மருத்துவமனையில் இன்று காலை 6 மணியளவில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக 4, 5 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றூ உயிரிழந்தார்.

அவரது சொந்த ஊரான ஆந்திர பிரதேச மாநிலம் வாரங்கலில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அவர் தனது முழு வாழ்க்கையையும் கட்சிக்காக அர்ப்பணித்துள்ளார். மேலும் பார்கல் மற்றும் ஷாயம்பேட் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியுள்ளார்.அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டா, தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் , மத்திய அமைச்சர்கள், மாநில தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி கூறியிருக்கும் இரங்கல் செய்தியில், ஸ்ரீ சி ஜங்கா ரெட்டி தனது வாழ்க்கையை பொது சேவைக்காக அர்ப்பணித்தவர். ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க.வை வெற்றியின் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளில் அவர் ஒரு அங்கமாக இருந்தார். பலரது மனங்களிலும் இடம் பிடித்தார்.அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. கட்சியின் பாதையின் மிக முக்கியமான கட்டத்தில் பாஜகவிற்கு திறம்பட குரல் கொடுத்தார். அன்னாரது மகனிடம் பேசி ஆறுதல் கூறினேன் ஓம் சாந்தி என்று தெரிவித்துள்ளார்.
