cheif minister arrange special forces to kerala to fight for metro man
கொச்சி மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில், மெட்ரோ ரெயில் தலைமை ஆலோசகர் இ. தரனை, பிரதமர் மோடியுடன் இணைந்து பங்கேற்க வைக்க கேரள அரசு தொடர்ந்து போராடி வருகிறது.
ஆனால், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் அனுமதி அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளதால், பிரச்சினை நீடிக்கிறது.
மெட்ரோ மேன்
டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனின் தலைமை ஆலோசகர், மெட்ரோ ரெயில் இந்தியாவுக்கு வர காரணமாக இருந்தவர் இ.தரன். இவரை மெட்ரோ மேன் என்று அழைக்கப்படுகிறார். இவரின் தலைமையில்தான் கொச்சி மெட்ரோ ரெயில் பணிகள் முடிந்து நாளை(17-ந்தேதி) செயல்பாட்டுக்கு வருகிறது.
தொடக்கவிழா
கொச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மெட்ரோ ரெயிலை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். விழா நடக்கும் மேடையில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, முதல்வர் பினராயி விஜயன், எம்.பி. கே.வி. தாமஸ், அமைச்சர் தாமஸ் சாண்டி, மேயர் சவுமினி ஜெயின் ஆகியோர் மட்டுமே பங்கேற்க பிரதமர் சிறப்பு பாதுகாப்பு படையினர் அனுமதி அளித்துள்ளனர்.
்அனுமதி கோருகிறது
ஆனால், கேரள அரசு, மெட்ரோ தலைமை ஆலோசகர் தரண், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, தொகுதி எம்.எல்.ஏ. பி.டி. தாமஸ் ஆகியோரும் விழாமேடையில் பங்கேற்க அனுமதிக்க கோரியுள்ளது. இது தொடர்பாக கடிதமும் எழுதியுள்ளது.
உரசல்
இதனால், பிரதமர் அலுவலகத்துக்கும், கேரள முதல்வர் அலுவலகத்துக்கும் இடையே இப்போது உரசல் ஏற்பட்டுள்ளதால், தரன் பங்ேகற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிரச்சினை வேண்டாம்
இந்நிலையில் கொச்சி மெட்ரோ ரெயிலின் இறுதிக்கட்ட பணிகளை ஆய்வு செய்ய தரன் ேநற்று வருகை தந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், “ பிரதமர் மோடி பங்ேகற்கும்விழாவில், தொடக்கவிழா மேடையில் என்னை அழைத்தது வழக்கமானது ஒன்றும் இல்லை. அதேசமயம், பிரதமர் மோடி பாதுகாப்பு கருதி எனக்கு அனுமதியளிக்கவில்லை என்பதையும் பெரிய பிரச்சினையாக்காதீர்கள். பிரதமர் பாதுகாப்பே முக்கியம்’’ என்றார்.
