குனோ பூங்காவில் சிறுத்தை சுற்றுலா! சௌகான் தகவல்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் சிறுத்தைச் சுற்றுலா வரும் 2023 பிப்ரவரியில் ஆரம்பிக்கும் என்று அம்மாநில முதல் சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்கான திட்டங்கள் பற்றிப் பேசியுள்ளார்.
குனோ தேசிய பூங்காவில் நமீபியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட எட்டு சிறுத்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்தச் சிறுத்தைப் பற்றிக் கூறிய சௌகான், "அவை இந்திய தட்பவெப்பச் சூழல்நிலைக்கு மாறியிருக்கின்றன. நல்ல ஆரோக்கியத்துடனும் உள்ளன. நன்றாக வேட்டையாடி வருகின்றன. இதே நிலையில் நீடித்தால் வரும் பிப்ரவரி மாதம் சிறுத்தை சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.
சாலை விபத்துகளில் 1.53 லட்சம் மரணங்கள்: மத்திய அரசு தகவல்
மத்திய பிரதேசத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்திற்காக கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நமீபியா சிறுத்தைகள் குனோ தேசியப் பூங்காவுக்கு அழைத்துவரப்பட்டன. அவற்றை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தார்.
இப்போது அந்தச் சிறுத்தைகள் புதிய சீதோஷ்ண நிலைக்குப் பழகும் வகையில் குனோ பூங்காவில் பாதுகாக்கப்படுகின்றன. பின்னர் அவை வனப்பகுதிக்குள் சுதந்திரமாக விடப்படும்.
சிறுத்தை சுற்றுலா மட்டுமின்றி, பழங்குடிகளின் வாழ்க்கை முறை மற்றும் பண்பாட்டை அறியும் வகையில் சஹாரியா பழங்குடியினர் இல்லத்தில் சில நாட்கள் தங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று முதல்வர் சௌகான் தெரிவித்துள்ளார்.
மனைவின்னா இப்படி இருக்கணும்!: மனம் திறந்தது பேசிய ராகுல்