ராமர் புகைப்படத்துடன் கூடிய தட்டில் பிரியாணி: டெல்லியில் பரபரப்பு!
ராமர் புகைப்படத்துடன் கூடிய தட்டில் பிரியாணி பரிமாறப்பட்டதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ராமர் புகைப்படத்துடன் கூடிய தட்டில் பிரியாணி பரிமாறப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் பிரியாணி விற்பனையாளர் ஒருவர் ராமரின் புகைப்படத்துடன் கூடிய ஒருமுறை பயன்படுத்டும் தட்டுகளில் பிரியாணி பரிமாறியது கண்டறியப்பட்டுள்ளது.
உள்ளூர் இந்து அமைப்புகள் பிரியாணி கடையில் வைக்கப்பட்டிருந்த தட்டுகளில் ராமரின் புகைப்படத்தை கண்டறிந்ததையடுத்து, இந்த விவகாரம் ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து விற்பனையாளரிடம் அவர்கள் விசாரித்ததில், ஒருமுறை பயன்படுத்தப்படும் தட்டுகள், குப்பைத் தொட்டியில் போடப்பட்ட பின்னர், மீண்டும் எடுக்கப்பட்டு அதில் மக்களுக்கு பிரியாணி வழங்கப்படுவதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராமர் புகைப்படம் கொண்ட தட்டுகளை பறிமுதல் செய்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவிபேட் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி: அதிகாரிகள் ஆஜராக உத்தரவு!
இந்தியாவில் ராமர் மிகவும் உணர்ச்சிமிக்க விஷயமாகும். உச்ச நீதிமன்ற திர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயதுடைய குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமர் கோயில் விவகாரம் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், ராமர் புகைப்படத்துடன் கூடிய தட்டில் பிரியாணி பரிமாறப்பட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.