சந்திரயான் - 3 திட்ட விஞ்ஞானிகளை பாராட்ட பெங்களூரு வந்தடைந்தார் பிரதமர் மோடி
தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சந்திரயான் - 3 திட்ட விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டுவதற்காக பெங்களூரு வருகை தந்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சந்திரயான் - 3 திட்ட விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டுவதற்காக பெங்களூரு வருகை தந்துள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றார். மாநாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து நேரடியாக கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்து தாயகம் புறப்பட்டார். வழக்கமாக அவர் டெல்லி வந்து இறங்குவார். ஆனால், இந்தமுறை நேராக பெங்களூர் வந்தடைந்தார்.
ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடியை கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், பாஜக தலைவர்கள் வரவேற்வேற்றனர். பின்னர் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் சந்திரயான் 3 வெற்றிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகளை தனித்தனியாக பாராட்டுகிறார். இதைத் தொடர்ந்து விஞ்ஞானிகளை வாழ்த்தி உரையாற்றுகிறார். பின்னர் காலை 8.30 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பெங்களூருவில் தரையிறங்கிவிட்டேன். விஞ்ஞானிகளை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.