எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது.. கனவை நிறைவேற்றிய இந்தியா - நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3!
இந்தியாவின் லட்சிய கனவான மூன்றாவது நிலவு திட்டமான தற்போது வெற்றிக்கான பாதையில் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது. இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3, இன்று சனிக்கிழமை நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வான்வெளி ஆராய்ச்சியில், அதிலும் குறிப்பாக நிலவு குறித்த அடுத்த கட்ட ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற மேலை நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா முன்னிலை வகித்து வருகிறது என்பதை இந்தியர்களாகிய அனைவரும் பெருமைகொள்ள வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது.
இந்நிலையில் ஏற்கனவே இரண்டு சந்திரயான் விண்கலங்கள் நிலாவிற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் தற்போது சந்திரயான் 3 விண்கலமும் நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 14ம் தேதி மதியம் 2.35 நிமிடத்திற்கு சந்திரயான் நிலவை நோக்கி தனது பயணத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து துவங்கியது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது நிலவின் சுற்றுவட்ட பாதையில் தனது பயணத்தை துவங்கி உள்ள சந்திரயான் 3, படிப்படியாக அதன் சுற்றுப் பாதையை உயர்த்தி நிலவுக்கு மேலும் நெருக்கமாக தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும். விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி தற்பொழுது சந்திரயான் 3பயணித்து வருவதால், குறிப்பிட்ட தேதியில், அதாவது ஆகஸ்ட் 23ம் தேதி திட்டமிட்டபடி நிலவில் அது திரையரங்கும் என்று விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை பல தடைகளை தாண்டி பறந்து கொண்டிருக்கும் அந்த விண்கலம், இனியும் பல சவால்களை கடந்து முன்னோக்கி செல்ல வேண்டி உள்ளது. ஒரு கட்டம் வரை சுற்றுவட்ட பாதையில் உயரத்தை அதிகரிக்கும் அதே நேரம், நிலவை நெருங்கும்போது அதன் நீள் வட்ட பாதையின் உயரத்தை மெல்ல மெல்ல குறைத்து, நிலவின் பரப்பிலிருந்து சுமார் 80 முதல் 100 கிலோ மீட்டர் தொலைவில் விண்கலம் நிறுத்தப்பட்டு, அதன்பின் மெல்ல மெல்ல அது நிலவில் தரையிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சவால்கள் மிகுந்த இந்த கட்டங்களை இந்திய விஞ்ஞானிகள் கடும் சிரமத்துடன் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரின் 72 ஆண்டு கால அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த சிறப்பு அந்தஸ்து நீக்க நடவடிக்கை