நண்பனின் மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்.. இடையூறாக இருந்த கணவர் கொலை.. நாடகமாடிய ஷிவானி சிக்கியது எப்படி?
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு நடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷிவானி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ரமேஷின் நண்பரான ராமாராவ் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது, ஷிவானியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. ரமேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.
நாளடைவில் அக்கம் பக்கத்தினர் மூலமாக ரமேஷ்க்கு இந்த விஷயம் தெரியவந்தது. இதனையடுத்து, மனைவியைும், நண்பரான ராமாராவையும் எச்சரித்துள்ளார்.
ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பழகி வந்துள்ளனர். இதனிடையே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.
அதன்படி கடந்த 1ம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிய ரமேஷுக்கு மனைவி ஷிவானி மூக்கு முட்ட மது ஊத்தி கொடுத்துள்ளார். போதையில் மட்டையான ரமேஷை
தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தனர். பின்னர், எதுவும் தெரியாதது போல மறுநாள் காலையில் மாரடைப்பால் கணவர் உயிரிழந்ததாக கதறி அழுது நாடகமாடியுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சந்தேகத்தின் பேரில் மனைவி விசாரணை நடத்தப்பட்டு அவரது செல்போனை ஆய்வு செய்த போது ராமாராவுடன் பலமுறை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. பின்னர், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.