ஜூலை 14 ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் நிலவை நோக்கி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலம் பற்றிய முக்கிய தகவலை இஸ்ரோ வெளியிட்டு இருக்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆராய்வதற்காக ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2 ம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14 ம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. 

அதன்படி, சந்திரயான் விண்கலன் புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, நள்ளிரவு 12 - 01 மணிக்குள் நிலவின் நீள் வட்டப் பாதையை நோக்கி விண்கலம் பயணிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே 5 கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது.

தற்போது பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து வெளியேறி நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியிருக்கும் சந்திரயான் 3 விண்கலம் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் செலுத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 5- ம் தேதியில் இருந்து 23 ஆம் தேதி வரை நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் சந்திரயான் விண்கலம் பயணிக்கும். 

Scroll to load tweet…

அதன்பிறகு ஆகஸ்ட் 23 ம் தேதி மாலை 5.47க்கு நிலவில் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்க உள்ளது. இந்த நிலையில் இஸ்ரோ முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 1 நள்ளிரவில் பூமியை விட்டு வெளியேறிய பிறகு, அதன் சுற்றுப்பாதையை 288 கிமீ x 369328 கிமீ ஆக உயர்த்தி, வெற்றிகரமாக முடித்துள்ளது என்று இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!