Asianet News TamilAsianet News Tamil

“பொது மக்களுக்கு இலவச ஸ்மார்ட்ஃபோன்..!!!” - ஆந்திர முதலமைச்சர் அதிரடி..!!

chandrababu naidu-smartphone
Author
First Published Nov 27, 2016, 5:35 PM IST


புழக்கத்தில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின்  அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட சில்லறை தட்டுப்பாடு காராணமாக பொதுமக்கள், சிறு குறு வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமும், இணையம் வழியாக பண பரிவர்த்தனையும் செய்து தங்களுக்கு தேவையுள்ள பொருட்களை வாங்கும் நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

chandrababu naidu-smartphone

இதனிடையே, படிக்காத பாமர மக்கள் இணையவழி பணப்பரிவர்த்தனைகளை எப்படி பயன்படுத்துவது என தெரியவில்லை என்றும், இதனை பயன்படுத்த தங்களிடம் ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில், ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் தற்காலிகமானது தான் என தெரிவித்துள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநி‌லத்தில் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வசதியாக ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்ஃபோன் தர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios