மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் எக்சிட் போல்கள், பாரதிய ஜனதா கட்சி முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என வலுவாகக் கணிக்கின்றன. பல்வேறு நிறுவனங்களின் கணிப்புகள் பாஜகவுக்கு தெளிவான பெரும்பான்மை கிடைக்கும் என சுட்டிக்காட்டினாலும், இது முன்னறிவிப்பு மட்டுமே என்பதால் இறுதி முடிவுகளுக்கு காத்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு உட்பட 5 மாநில கணிப்பு முடிவுகள் - எங்கு? எப்போது பார்க்கலாம்? லைவ் அப்டேட்ஸ்

Exit Poll Results 2026 Live : 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான எக்சிட் போல்கள் இன்று (ஏப்ரல் 29) மாலை 6.30 மணியளவில் வெளியாகின்றன. தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு நீங்கிய பிறகு இந்த கணிப்பு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

Exit Poll Results 2026 Live150+ சீட்.? மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை.. மம்தாவுக்கு குட்பை.. எக்சிட் போல் முடிவுகள் சொல்வது என்ன?
Exit Poll Results 2026 Liveஎடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், திமுக கூட்டணி மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்துள்ளன. அதிமுக இந்த முடிவுகளில் பின்னடைவைச் சந்தித்தாலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிடத்தக்க இடங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Exit Poll Results 2026 Liveமீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன?
5.73 கோடி மொத்த வாக்காளர்களில் 85 சதவீதம் அதாவது 4.82 கோடி வாக்களித்துள்ளனர். இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது.
Exit Poll Results 2026 Liveவிஜயின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட ஸ்டாலின், எடப்பாடி.. தவெக எத்தனை சீட்டில் ஜெயிக்கும்?
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் எக்சிட் போல்கள், திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான இடங்களைப் பெற்று, ஒரு புதிய சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பை இந்த கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
Exit Poll Results 2026 Liveமுதல்வர் ஆகிறார் விஜய்.. ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு
சமீபத்திய ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 98-120 இடங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாகக் கூறுகிறது. இது திமுக, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டுகிறது.
Exit Poll Results 2026 Liveஅசாமில் அடிச்சு தூக்கும் பாஜக.. 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும்.. பரபர கருத்து கணிப்பு
அசாம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக கூட்டணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து ஹாட்ரிக் சாதனை படைக்கும்.
Exit Poll Results 2026 Liveகேரளாவை கைப்பற்றுவது யார்.?
Axis My India வெளியிட்ட எக்சிட் போல் கேரளாவில் ஆட்சி மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக இளம் வாக்காளர்களின் ஆதரவு இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்றும் இந்த கணிப்பு தெரிவிக்கிறது. LDF கூட்டணி 39% வாக்குகளுடன் பின்தங்கியுள்ளது.
Exit Poll Results 2026 Liveதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 5.73 கோடி மொத்த வாக்காளர்களில் 85 சதவீதம் அதாவது 4.82 கோடி வாக்களித்துள்ளனர். இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது.
Exit Poll Results 2026 Liveமுந்தும் அதிமுக.. விடாத திமுக.. மண்டல வாரியான கருத்துக்கணிப்பு முடிவுகள்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளியாகியுள்ள “FOTN தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள், மாநில அரசியல் சமநிலையை சுவாரஸ்யமான கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளன.
Exit Poll Results 2026 Liveமேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வரிசையில் உள்ள அனைவரும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். வாக்குப்பதிவு முடிந்ததும் சுமார் 7 மணியளவில் எக்சிட் போல்கள் வெளியாகும். தற்போது TMC 223 இடங்களுடன் ஆட்சியில் உள்ளது; BJP சுமார் 65 இடங்கள் பெற்றுள்ளது.
Exit Poll Results 2026 Liveபுதுச்சேரி
33 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது. தற்போது AINRC-BJP கூட்டணி ஆட்சியில் உள்ளது. DMK-காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சியாக உள்ளது. இங்கும் எக்சிட் போல்கள் மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும்.
Exit Poll Results 2026 Liveஅசாம்
அசாமில் 126 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடந்தது. NDA கூட்டணி (BJP தலைமையில்) தற்போது 80 இடங்களுடன் ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி மற்றும் பிற கட்சிகள் மீதமுள்ள இடங்களை பிடித்துள்ளன. எக்சிட் போல்கள் மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும்.
Exit Poll Results 2026 Liveகேரளா
கேரளாவில் 140 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. எக்சிட் போல்கள் இன்று மாலை வெளியாகும் நிலையில், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தற்போது எல்டிஎப் ஆட்சி 95 இடங்களுடன் உள்ளது. யுடிஎப் 42 இடங்களுடன் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது.
Exit Poll Results 2026 Liveஎப்போது வெளியாகியது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்?
2026 சட்டமன்றத் தேர்தல்களின் எக்சிட் போல்கள் இன்று (ஏப்ரல் 29) வெளியாகின்றன. மேற்கு வங்கத்தின் இறுதி கட்ட வாக்குப்பதிவு மாலை முடிவடைந்ததும், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு நீங்கிய பிறகு சுமார் மாலை 6.30 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட உள்ளன. தொலைக்காட்சி சேனல்கள், polling agency வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இதை நேரலையாக பார்க்கலாம். நமது ஏசியாநெட் செய்தி தளத்திலும் இதனை நீங்கள் காணலாம். உடனுக்குடன் எக்சிட் போல் (தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு) முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.