நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக மத்திய அரசு எனக்கு உறுதியளித்தது. ஆனால், தொடர்ந்து எங்கள் கோரிக்கையை அவர்கள் புறக்கணித்தனர். எனவே, இனியும் அவர்களுடனான கூட்டணியில் தொடர முடியாது என்று கூறி முதலில் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியது. இதனையடுத்து கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறியது. அதன் பிறகு மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர தெலுங்கு தேசம் மற்றும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தீர்மானித்தது. ஆனால் தொடர் அமளி காரணமாக தீர்மானம் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து, நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரில் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி ஏற்படுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது.