ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பைவிட, பேரன் தேவான்ஷின் சொத்து மதிப்பு அவரை விட அதிகமாக உள்ளது.

ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேச கட்சியின் பொது செயலாளருமான நரா லோகேஷ், தனது குடும்ப சொத்து மதிப்பை வெளியிட்டார்.

தனது குடும்ப சொத்து மதிப்பு 74 கோடி ரூபாய் என்றும், அதில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு 3.73 கோடி ரூபாய் என்றும் கூறியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு சொந்தமான ஹெரிடேஜ் குரூப், அவரின் மனைவி புவனேஷ்வரியின் பெயரில் இயங்கி வருகிறது. புவனேஷ்வரிக்கு மட்டும் அதிகமாக 33.66 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக லோகேஷ் கூறியுள்ளார். 

மேலும், சந்திரபாபு நாயுடுவின் பேரனம், லோகேஷின் மகனுமான 18 மாத குழந்தையான தேவான்ஷ்-க்கு ரூ.14 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளது. லோகேஷ் கூறிய குடும்ப சொத்து மதிப்புப்படி பார்த்தால், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது 18 மாத பேரனுக்கு சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.