சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சை.. வீடியோவில் வசமாக சிக்கிய தேர்தல் அதிகாரி.. உச்சநீதிமன்றம் காட்டம்..

சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்றமும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Chandigarh Mayor Election controversy deepens with poll officer's new video after supreme court condemns Rya

பஞ்சாப், ஹரியானா மாநிங்களின் தலைநகரான சண்டிகர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் உள்ளது. இந்த சூழலில் சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த 30-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி இணைந்து எதிர்கொண்ட நிலையில் பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது. அதன்படி பாஜக சார்பில் இந்த தேர்தலில் மனோஜ் சோன்கர் என்பவர் போட்டியிட்டா. அதே நேரம் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் போட்டியிட்டார். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு அதிக கவுன்சிலர்கள் இருப்பதால் அந்த கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவார் என்று கருதப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் இதற்கு நேர்மாறாக வெளியானது. இந்த மேயர் தேர்தலில் பாஜகவுக்கு 16 வாக்குகளும், இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த 8 வாக்குகள் செல்லாத வாக்குகள் என்று அறிவிக்கப்பட்டதால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சர்ச்சைக்கு வலு சேர்க்கும் விதமாக மேயர் தேர்தலி விதி மீறல் நடந்ததாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.. 

இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுதொடர்பான வீடியோ ஒன்ற தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தேர்தல் அதிகாரி அனில் மசிஹ், வாக்குச்சீட்டில் ஏதோ எழுதி, திருத்தம் செய்து, கையொப்பமிடுவதை பார்க்க முடிகிறது.

 

மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதிவில் “ சண்டிகர்  மேயர் தேர்தலின் போது இவர்கள் கையும் களவுமாக பிடிபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. நாட்டில் இதுவரை எத்தனை தேர்தல்கள் நடந்திருக்கும், இது போன்ற மோசடிகளை செய்திருப்பார்களோ, எத்தனை தேர்தல்களில் இப்படி நேர்மையற்ற முறையில் வெற்றி பெற்றிருப்பார்களோ யாருக்குத் தெரியும்?” என்று பதிவிட்டுள்ளார்.

 

இதனிடையே ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் இந்த தேர்தல் முறைகேடு தொடர்பாக பஞ்சாப் ஹரியானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்துவிட்டது.

இதை தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை நேற்று விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளில் முறைகேடு செய்ததை விளக்கும் வீடியோ ஒன்றை அளித்தார்.

அப்போது தேர்தல் அதிகாரி அனில் மசீஹின் நடத்தையை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம் இது ஜனநாயக படுகொலை என்றும் காட்டமாக தெரிவித்தது.. மேலும்  "இவ்வாறு அவர் தேர்தலை நடத்துகிறாரா? இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும். இது ஜனநாயகத்தின் நடத்தப்பட்ட கொலை.. இவர் மீது வழக்குத் தொடர கூடாது?: என்று கேள்வி எழுப்பியது. 

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் பேசிய போது, " உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க தவறிவிட்டது.. மேயர் சண்டிகர் நகராட்சித் தேர்தல்களின் முழுப் பதிவையும் உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலிடம் ஒப்படைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். வாக்குச் சீட்டுகள், வீடியோகிராபியுடன் பாதுகாக்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் பதிவேடுகளை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல் மூலம் வாக்குச் சீட்டு, வீடியோ மற்றும் பிற பொருட்கள் உட்பட தேர்தல் செயல்முறையின் முழு பதிவேடுகளையும் பாதுகாக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் மறு உத்தரவு வரும் வரை, சண்டிகர் மாநகராட்சியின் அடுத்த கூட்டத்தையும் நடத்தக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios